
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம்
நாச்சியார் மேட்ரிமோனி ஒரு முக்குலத்தோர் திருமண தகவல் மையமாகும்.
மேலும் கள்ளர், மறவர், அகமுடையார் சமூக மக்களின் தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்ப திருமணங்களை ஏற்பாடு செய்து கொள்வதற்கு உதவுகிறது.
SINCE 2013
Year
100+
Happy Couples
15+
Years
நமது மகத்தான சேவை
கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் மூலமாக முக்குலத்தோர் சமூக மக்களின் சமூக நலன், எளிய மக்களுக்கான சேவை செய்தல் , குழந்தைகள் கல்வி, குடும்ப மதிப்பை மேம்படுத்துதல், ஆன்மீகம், ஆகிய துறைகளில் தொடர்ச்சியான சேவையை வழங்கி வருகின்றோம்.
ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட நாச்சியார் மேட்ரிமோனியின் அர்ப்பணிப்பு சேவையின் மூலம் திருமணம் உறுதி செய்யப்பட்டு சமூக மக்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
வருங்காலங்களில் முக்குலத்தோர் சமூக மக்களின் திருமண பந்தம் உருவாவதில் நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம் சமூக வளர்ச்சிக்கு ஒரு அங்கமாக திகழும் என்பதனை உறுதியாக நம்புகின்றோம்.
மேலும் நமது சேவைகள்

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் கோவில் நகரமான கும்பகோணத்தில் நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் சார்பில் சுயம்வரம்
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் கோவில் நகரமான கும்பகோணத்தில் நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் சார்பில் சுயம்வரம் (ஜாதக பரிமாற்ற விழா) ஆகஸ்ட் 24 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தாராசுரத்தில் உள்ள வேலு வெள்ளையம்மாள் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக,தவத்திரு ஸ்ரீ வீரப்பிள்ளை தம்புரான் சுவாமிகள், தொழிலதிபரும், முத்து குரூப்ஸ் நிர்வாக இயக்குனருமான திரு. R.P.முத்துராம் ,கும்பகோணம் முன்னாள் நகர மன்ற தலைவர் திருமதி. ரதிமீனா சேகர், தஞ்சை மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு.வேதா, தென்னிந்திய பார்வர்ட்

முப்பெரும் விழாவில் ஸ்ரீ ராஜராஜ சோழன் , மருது சகோதரர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
உறவுகள் அனைவருக்கும் வணக்கம். புதுச்சேரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஸ்ரீ ராஜராஜ சோழன் , மருது சகோதரர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திர இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீர வரலாற்றில் நிலைத்து நின்ற தமிழ் முன்னோர்களின் தியாகத்தினை போற்றும் வகையில் ஸ்ரீ ராஜராஜ சோழன் 1040 சதய விழா, மருது சகோதரர்களின் 224 வது குருபூஜை விழா மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா என முப்பெரும் விழா

மயிலாடுதுறை தீ விபத்தில் உடைமைகளை இழந்த குடும்பத்தினருக்கு உதவிய நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம்
மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் வசித்து வரும் ராசாகனி தமிழ் செல்வி குடும்பத்தினரின் வீடு கடந்த ஜூன் 5 அன்று மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை அனைத்தும் முற்றிலும் எரிந்துவிட்டன. இந்நிலையில் தனது வீடு மற்றும் உடமைகளை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு நாச்சியார் திருமண தகவல் மையத்தின் நிர்வாக இயக்குனர் முத்தழகன் தேவர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ரூபாய். 80,000/- மதிப்பிலான, வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கினர். இந்நிகழ்வில்

காரைக்கால் அம்மையார் திருத்தலத்தில் நடைபெறும் மாங்கனி திருவிழாவில் அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் திருத்தலத்தில் நடைபெறும் மாங்கனி திருவிழாவில் நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது.

மாணவி ஷிவானியின் கல்வி கட்டணத் தொகை
புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை சேர்ந்த ஷிவானி தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த நிலையில் கல்லூரி கல்வி கட்டணத்தை குடும்ப வறுமையின் காரணமாக செலுத்த முடியாத காரணத்தினால் கல்வி சான்றிதழை பெற முடியாமல் இருந்து வந்தார். இந்நிலையில் நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் நிர்வாக இயக்குனர் அ.முத்தழகன் மற்றும் R.M.Trust நிர்வாக இயக்குனர் R.முருகேஷ் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மாணவி ஷிவானியின் கல்வி கட்டணத் தொகை ரூபாய். 85,000 /- செலுத்தி மாணவியின் சான்றிதழை பெற்றுத் தந்தனர்.

புதிய மின் இணைப்பு , மின்விசிறி மின்விளக்கு உள்ளிட்டவைகளை வழங்கினர்.
காரைக்கால் தலத்தெரு பெட்ரோல் பங்கு அருகாமையில் குடிசை வீடு முழுமையாக தீ பற்றி எரிந்து சேதமடைந்தது. சேதமடைந்த வீட்டிற்கு 22.11.2020 அன்று நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ரூபாய் 12000/- மதிப்பில் புதிய மின் இணைப்பு , மின்விசிறி மின்விளக்கு உள்ளிட்டவைகளை வழங்கினர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியில் உள்ள மக்களுக்கு 20.11.2018 அன்று நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் நிர்வாக இயக்குனர் அ. முத்தழகன் தேவர் உணவு பொருட்கள் வழங்கினார்.

ஸ்ரீ ராஜராஜ சோழன் 1039 சதய விழா, மருது சகோதரர்களின் 273 வது குருபூஜை விழா மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது ஜெயந்தி விழா
புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஸ்ரீ ராஜராஜன் சோழன் , மருது சகோதரர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திர இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீர வரலாற்றில் நிலைத்து நின்ற தமிழ் முன்னோர்களின் தியாகத்தினை போற்றும் வகையில் ஸ்ரீ ராஜராஜ சோழன் 1039 சதய விழா, மருது சகோதரர்களின் 273 வது குருபூஜை விழா மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது ஜெயந்தி விழா என முப்பெரும் விழா

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 117 வது ஜெயந்தி விழா 62-வது குருபூஜை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 117 வது ஜெயந்தி விழா 62-வது குருபூஜை மற்றும் தீப ஒளி திருநாளை முன்னிட்டு 30.10.24 அன்று சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் நிர்வாக இயக்குனர் அ. முத்தழகன் தேவர் வழங்கினார்.

நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மைய தன்னார்வலர்கள் இரத்ததானம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் மருது சகோதரர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் இயக்குனர் மற்றும் தன்னார்வலர்கள் ரத்ததானம் வழங்கினர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்குபெற உதவி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கன்னியம்பட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் கிரிஷா,சின்னா சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் குடும்ப சூழ்நிலை காரணமாக மாணவர்களால் சிலம்பப் போட்டியில் பங்கேற்க முடியாமல் இருந்த நிலையில் இப் போட்டியில் பங்கேற்க ஆகும் முழு செலவினையும் நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் நிர்வாக இயக்குனர் முத்தழகன் தேவர் நேரில் சென்று மாணவர்களை வாழ்த்தி அவரது பெற்றோரிடம் அதற்கான முழு தொகை ரூபாய். 20,000 / வழங்கினார். மேலும் இம்மாணவர்கள்

சாலை ஓரத்தில் வசிக்கும் இயலாதவர்களுக்கு அன்னதானம்
மாதம் தோறும் பௌர்ணமி அன்று அருள்மிகு கோரக்கர் சித்தரை வணங்கி வரன் தேடும் முக்குலத்தோர் உறவுகள் அனைவருக்கும் நல்லதொரு திருமண வரன் அமைந்திட வேண்டி நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் சார்பாக சாலை ஓரத்தில் வசிக்கும் இயலாதவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.

