 
ஸ்ரீ ராஜராஜ சோழன் 1039 சதய விழா, மருது சகோதரர்களின் 273 வது குருபூஜை விழா மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது ஜெயந்தி விழா
புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஸ்ரீ ராஜராஜன் சோழன் , மருது சகோதரர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீர வரலாற்றில் நிலைத்து நின்ற தமிழ் முன்னோர்களின் தியாகத்தினை போற்றும் வகையில் ஸ்ரீ ராஜராஜ சோழன் 1039 சதய விழா, மருது சகோதரர்களின் 273 வது குருபூஜை விழா மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது ஜெயந்தி விழா என முப்பெரும் விழா நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சினிமா துறை பிரபலங்கள், சமுதாயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.






  Please login to post a comment. 
 
 
