முப்பெரும் விழாவில் ஸ்ரீ ராஜராஜ சோழன் , மருது சகோதரர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.





உறவுகள் அனைவருக்கும் வணக்கம். புதுச்சேரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஸ்ரீ ராஜராஜ சோழன் , மருது சகோதரர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீர வரலாற்றில் நிலைத்து நின்ற தமிழ் முன்னோர்களின் தியாகத்தினை போற்றும் வகையில் ஸ்ரீ ராஜராஜ சோழன் 1040 சதய விழா, மருது சகோதரர்களின் 224 வது குருபூஜை விழா மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா என முப்பெரும் விழா 2025 -புதுச்சேரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமுதாயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
இவ்விழா வெகு விமர்சையாகவும் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுத்த உறவுகள் அனைவருக்கும்
எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்
என்றும் முக்குலத்தோர் சேவையில்
நான் உங்கள் உறவாக
காரை.முத்தழகன் தேவர்
ஜெய்ஹிந்த் 🏹🦈🐯🙏

