 
மயிலாடுதுறை தீ விபத்தில் உடைமைகளை இழந்த குடும்பத்தினருக்கு உதவிய நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம்
மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் வசித்து வரும் ராசாகனி தமிழ் செல்வி குடும்பத்தினரின் வீடு கடந்த ஜூன் 5 அன்று மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை அனைத்தும் முற்றிலும் எரிந்துவிட்டன. இந்நிலையில் தனது வீடு மற்றும் உடமைகளை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு நாச்சியார் திருமண தகவல் மையத்தின் நிர்வாக இயக்குனர் முத்தழகன் தேவர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ரூபாய். 80,000/- மதிப்பிலான, வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கினர். இந்நிகழ்வில் காரைக்கால் சந்திரசேகரன், பேராசிரியர் வாசுதேவன்,அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். – 23.07.25



  Please login to post a comment. 
 
 
