ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் கோவில் நகரமான கும்பகோணத்தில் நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் சார்பில் சுயம்வரம்
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் கோவில் நகரமான கும்பகோணத்தில் நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் சார்பில் சுயம்வரம் (ஜாதக பரிமாற்ற விழா) ஆகஸ்ட் 24 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தாராசுரத்தில் உள்ள வேலு வெள்ளையம்மாள் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக,தவத்திரு ஸ்ரீ வீரப்பிள்ளை தம்புரான் சுவாமிகள், தொழிலதிபரும், முத்து குரூப்ஸ் நிர்வாக இயக்குனருமான திரு. R.P.முத்துராம் ,கும்பகோணம் முன்னாள் நகர மன்ற தலைவர் திருமதி. ரதிமீனா சேகர், தஞ்சை மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு.வேதா, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் திரு. ரமேஷ், மருது மக்கள் மன்றம் நிறுவனர் கவிஞர் பூபதி ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் துவக்கமாக தமிழகத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பத்தை பற்றி காணொளிக்காட்சி மூலமாக எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் மயிலாடுதுறை சிலம்பம் சரவணன் அவர்களுடைய மாணவர்கள் சிலம்பம் சுற்றியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் நிர்வாக இயக்குனர் திரு. முத்தழகன் தேவர் சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இந் நிகழ்ச்சியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரன் தேடும் பெற்றோர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.மணமகன் மணமகளுடைய சுய விவரங்கள் புகைப்படங்கள் LED திரையின் மூலம் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. தொலைதூர மாவட்டங்களில் இருந்து வந்த முக்குலத்து சொந்தங்கள் விழாவை சிறப்பித்தனர்.







