 
அரசு பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்குபெற உதவி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கன்னியம்பட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் கிரிஷா,சின்னா சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் குடும்ப சூழ்நிலை காரணமாக மாணவர்களால் சிலம்பப் போட்டியில் பங்கேற்க முடியாமல் இருந்த நிலையில் இப் போட்டியில் பங்கேற்க ஆகும் முழு செலவினையும் நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் நிர்வாக இயக்குனர் முத்தழகன் தேவர் நேரில் சென்று மாணவர்களை வாழ்த்தி அவரது பெற்றோரிடம் அதற்கான முழு தொகை ரூபாய். 20,000 / வழங்கினார். மேலும் இம்மாணவர்கள் இப்போட்டியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




  Please login to post a comment. 
 
 
